

அண்மையில் பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆன சினிமா நட்சத்திரங்களான ஆலியா பட், ரன்பீர் கபூர் தம்பதியரை பிரபல கால்பந்தாட்ட விளையாட்டு கிளப் அணிகளில் ஒன்றான பார்சிலோனா அணி வாழ்த்தி உள்ளது. இந்த வாழ்த்து செய்தியை ட்வீட் மூலம் பகிர்ந்துள்ளது அந்த அணி.
பாலிவுட் சினிமா நடிகர்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் கடந்த ஏப்ரல் மாதம் மண வாழ்க்கையில் இணைந்தனர். அதற்கு முன்னர் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் காதல் செய்து வந்தனர். அண்மையில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ‘ராஹா’ என இருவரும் தங்கள் மகளுக்கு பெயர் சூட்டி உள்ளனர்.
ஆலியாவின் கணவர் ரன்பீர், பார்சிலோனா அணியின் தீவிர ரசிகர். இந்த நிலையில்தான் தம்பதியரை வாழ்த்தி உள்ளது பார்சிலோனா அணி.
“ஆலியா மற்றும் ரன்பீருக்கு எங்களது வாழ்த்துகள். பார்சிலோனா அணியின் புதிய ரசிகர் பிறந்துள்ளார். உங்களை பார்சிலோனாவில் சந்திக்க ஆவலுடன் காத்துள்ளோம்” என அந்த அணி ட்வீட் செய்துள்ளது.