புஜாரா மிக முக்கிய வீரர்: கபில்தேவ்

புஜாரா மிக முக்கிய வீரர்: கபில்தேவ்
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்ல் புஜாராவின் பங்கு மிக முக்கியமானது என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

கபில்தேவ் இங்கிலாந்து தொடர் குறித்து கூறியதாவது:

இந்திய அணி பலமாக உள்ளது. விராட் கோலி உலகின் நம்பர் 1 பேட்ஸ்மென், புஜாரா ஒரு சிறந்த டெஸ்ட் வீரர், 5 நாள் கிரிக்கெட்டிற்கு சரியாகப் பொருந்தி வரக்கூடியவர், அவர் நன்றாக விளையாடி ரன்கள் குவித்தால் இந்தியாவுக்குச் சாதகமாக முடிவுகள் இருக்கும். அவர் நாள் முழுதும் விளையாட முடியும் அவரிடம் அதற்கான பொறுமை உள்ளது.

கோலி முக்கியம் அல்ல என்று நான் கூறவில்லை, ஆனால் புஜாரா களத்தில் நிற்பதில் மிக முக்கியமான வீரர்.

இங்கிலாந்தில் ஆட்டம் ஒருபோதும் எளிதல்ல. பேட்டிங்கில் நிறைய ரன்கள் எடுத்தால் பவுலர்கள் சிறப்பாக வீச வாய்ப்பு ஏற்படும். இந்தியாவுக்கு வெளியே ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா சிறப்பாகப் பந்து வீசினால் வெற்றி வாய்ப்பு அதிகம். இஷாந்த், புவனேஷ், ஷமி ஆகியோரும் அந்த சூழ்நிலைக்கு ஏற்ற பவுலர்களே.

இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஒருவர் இருந்தால் விஷயம் வேறு, ஆல்ரவுண்டர் ஒருவர் 20 ஓவர்களை வீசி பிறகு 6 அல்லது 7ஆம் நிலையில் களமிறங்கி பேட்டிங் செய்ய வேண்டும். ஸ்டூவர்ட் பின்னி அணிக்குள் வர இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது, அவர் 20ஓவர்கள் வீச முடியும் என்ற எண்ணத்தை என்னிடத்தில் ஏற்படுத்தவில்லை.

அவர் ஒரு சிறந்த ஃபீல்டர். ஆனால் அவரால் 20 ஓவர்கள் வீசமுடியாமா என்பதில் சந்தேகங்கள் இருக்கிறது. நாம் விமர்சனம் செய்யும் போது விமர்சனம் செய்துவிட வேண்டும். அவர்கள் 4 ஓவர்கள் பவுலர்களாகவே உள்ளனர். நான் சிலரை 20 ஓவர்கள் 30 ஓவர்கள் வீசிப் பார்த்ததில்லை. ஆனால் சந்தேகத்தின் பலனை அவர்களுக்குச் சார்பாக வழங்குவோம்.

பந்து வீச்சில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக இருப்பார் என்று கருதுகிறேன்.

இவ்வாறு கூறினார் கபில்தேவ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in