FIFA WC 2022 | கத்தாரை வீழ்த்தியது ஈக்குவேடார்; முதல் இரண்டு கோல்களை பதிவு செய்தார் வலென்சியா

ஈக்குவேடார் அணி
ஈக்குவேடார் அணி
Updated on
1 min read

அல் கோர்: நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் முதல் குரூப் சுற்றுப் போட்டியில் கத்தாரை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது ஈக்குவேடார் அணி. 2022 உலகக் கோப்பையின் முதல் இரண்டு கோல்களை ஈக்குவேடார் அணியின் வலென்சியா பதிவு செய்தார்.

இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே பந்தை தங்கள் வசம் வைத்திருந்தது ஈக்குவேடார் அணி. அதன் காரணமாக முதல் பாதியின் 16 மற்றும் 31-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார் வலென்சியா. இந்த ஆட்டம் தொடங்கிய முதல் சில நூறு நொடிகளுக்குள் கோல் பதிவு செய்தது ஈக்குவேடார். ஆனாலும் விஏஆர் தொழில்நுட்பம் கொண்டு அதை செக் செய்த பிறகு கோல் இல்லை என அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக அது சர்ச்சையாகவும் மாறி உள்ளது.

இன்று (திங்கள்கிழமை) நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து - ஈரான் மற்றும் நெதர்லாந்து - செனகல் அணிகள் விளையாடுகின்றன.

இந்த தோல்வியின் மூலம் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் முதல்முறையாக தோல்வியை தழுவியுள்ளது தொடரை நடத்தும் அணி ஒன்று தோல்வியை தழுவி உள்ளது. இதற்கு முன்னர் தொடரை நடத்திய அணிகள் முதல் அல்லது தொடக்க ஆட்டத்தில் தோல்வியை தழுவியதில்லை என தகவல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in