Last Updated : 15 Nov, 2016 04:29 PM

 

Published : 15 Nov 2016 04:29 PM
Last Updated : 15 Nov 2016 04:29 PM

2-வது டெஸ்ட்: இந்திய அணியில் கே.எல்.ராகுல்; கம்பீர் இடம் கேள்விக்குறி

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ள நிலையில் அடுத்ததாக வைசாகில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காயத்திலிருந்து மீண்ட ராகுல் அணியில் சேர்க்கப்பட்டதையடுத்து புதிய ‘ஸ்டான்ஸ்’ கைகொடுக்காமல் சொதப்பி வரும் கம்பீரின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.

நாளை மறுநாள் (நவ.17) விசாகப்பட்டனத்தில் 2-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

காயத்திலிருந்து மீண்ட ராகுல் தனது உடற்தகுதியை நிரூபிக்கும் விதமாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் ஆடி 85 பந்துகளில் 76 ரன்களையும் 132 பந்துகளில் 106 ரன்களையும் எடுத்துள்ளார்.

கவுதம் கம்பீரின் புதிய ‘டபுள் ஐ’ ஸ்டான்ஸை இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் கேள்விக்குட்படுத்தினார், இந்த ஸ்டான்சில் உள்ளே வரும் பந்துகளை ஆடுவது சிரமம் அதன் மூலம் முதல் இன்னிங்ஸில் எல்.பி. செய்தார் பிராட், 2-வது இன்னிங்சில் கிறிஸ் வோக்ஸின் ஷார்ட் பிட்ச் பந்தில் எட்ஜ் செய்து 0-வில் வெளியேறினார். இதனால் கம்பீர் மறு டெஸ்ட் வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x