FIFA WC 2022 | மைதானங்களின் முக்கிய அம்சங்கள்; மிதக்கும் ஓட்டல்கள்!

FIFA WC 2022 | மைதானங்களின் முக்கிய அம்சங்கள்; மிதக்கும் ஓட்டல்கள்!
Updated on
2 min read

உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக கத்தார் தலைநகர் தோகாவை சுற்றி 55 கிலோ மீட்டர் தூரத்துக்குள் 8 மைதானங்கள் கட்டப்பட்டுள்ளன. மைதானங்கள் அருகாமையில் இருப்பதால் ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்டங்களை பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது. அனைத்து மைதானங்களும் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மைதான கட்டிட பணிகளுக்காக 26 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

  • மைதான எண்ணிக்கை - 8
  • மொத்த ஆட்டம் - 64
  • இறுதிப் போட்டி - லுசைல் மைதானம்
  • அல் பேத் மைதானம், அல் கோஹ்ர் - இருக்கை வசதி: 60,000
  • கலீபா சர்வதேச மைதானம், தோகா - இருக்கை வசதி: 40,000
  • அல் துமாமா மைதானம், அல் துமாமா - இருக்கை வசதி: 40,000
  • அகமது பின் அலி மைதானம், அல் ரய்யான் - இருக்கை வசதி: 40,000
  • லுசைல் மைதானம், லுசைல் - இருக்கை வசதி: 80,000
  • மைதானம் 974, தோகா - இருக்கை வசதி: 40,000
  • எஜுகேசன் சிட்டி மைதானம், அல் ரய்யான் - இருக்கை வசதி: 45,350
  • அல் ஜனூப் மைதானம், அல் வக்ரா - இருக்கை வசதி: 40,000

மிதக்கும் ஓட்டல்கள்: கத்தார் உலகக் கோப்பையைக் காண வரும் ரசிகர்கள் தங்குவதற்காக எம்எஸ்சி போசியா, எம்எஸ்சி வேர்ல்ட் யூரோப்பா என இரு சொகுசுக் கப்பல் தோஹா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மிதக்கும் ஓட்டல்களான இவற்றில் 4 ஆயிரம் அறைகள் உள்ளன. இதில் 9,400 ரசிகர்கள் தங்க முடியும். எம்எஸ்சி போசியா மிதக்கும் ஓட்டலில், 1,265 கேபின்கள் உள்ளன. இதுதவிர நீச்சல் குளங்கள், ஸ்பா, வெல்னஸ் மையம், திரையரங்கு, நீச்சல்குளத்தையொட்டி வளாகம், டென்னிஸ், கூடைப்பந்து அரங்கம், 4 ரெஸ்டாரண்டுகள், 15 காபி ஷாப்புகள், நிகழ்ச்சி நடத்தும் வளாகங்கள் இந்த கப்பலில் அமைந்துள்ளன.

எம்எஸ்சி வேர்ல்ட் யூரோப்பா கப்பலில் 2,626 கேபின்கள் அமைந்துள்ளன. மேலும் 104 மீட்டர் தூரம் கொண்ட அவுட்டோர் வாக்வே, நீச்சல் குளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இதுதவிர எம்எஸ்சி ஒபேரா என்ற சொகுசுக் கப்பலும் இங்கு வரவுள்ளது. இந்த மிதக்கும் ஓட்டலில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.26,209 கட்டணமாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in