

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இன்னும் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களை விட அதிக வருவாயை ஈட்டுகிறது என்பது அனைவரும் தெரிந்த ஒன்று. ஆனால், உலக கிரிக்கெட்டின் மறுக்கமுடியாத அதிகார மையம் தான் மட்டுமே என்பதை பிசிசிஐ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. டைம்ஸ் நவ் வெளியிட்ட தரவுகளின்படி, 2021ல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 3,730 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமான கிரிக்கெட் ஆஸ்திரேலியா உள்ளது. அதன் வருவாய் 2,843 கோடி ரூபாய்.
என்றாலும், ஆஸ்திரேலியாவை விட பிசிசிஐயின் வருமானம் 23% அதிகம். மூன்றாவது இடத்தை இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் பெற்றுள்ளது. அது 2,135 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. 811 கோடி ரூபாய் வருவாய் உடன் பாகிஸ்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நான்காவது இடத்தில் உள்ளது.
ஐந்தாவது இடத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் உள்ளது. அது 802 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. பட்டியலில் தென்னாப்பிரிக்கா 485 கோடி ரூபாய் உடன் ஆறாவது இடத்திலும், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் 210 கோடி ரூபாய் உடன் ஏழாவது இடத்திலும் உள்ளது. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் (116 கோடி ரூபாய்), ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் (113 கோடி ரூபாய்), மற்றும், இலங்கை கிரிக்கெட் (100 கோடி ரூபாய்) ஆகியவை இந்தப் பட்டியலில் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
ஐபிஎல் வெற்றியே உலகின் அசைக்க முடியாத கிரிக்கெட் வாரியமாக மாற பிசிசிஐக்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.