சேத்தன் சர்மா தலைமையிலான பிசிசிஐ தேர்வுக்குழு கலைப்பு

சேத்தன் சர்மா தலைமையிலான பிசிசிஐ தேர்வுக்குழு கலைப்பு
Updated on
1 min read

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவை கூண்டோடு கலைத்துள்ளது பிசிசிஐ.

அண்மையில் முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவி வெளியேறி இருந்தது இந்திய கிரிக்கெட் அணி. இதனால் இந்திய அணி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே, இந்திய அணியை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவை கூண்டோடு கலைத்துள்ளது பிசிசிஐ.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவில், சுனில் ஜோஷி (தெற்கு மண்டலம்), ஹர்விந்தர் சிங் (மத்திய மண்டலம்) மற்றும் தேபாஷிஷ் மொஹந்தி (கிழக்கு மண்டலம்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழுவை கூண்டோடு கலைத்துள்ளது பிசிசிஐ. மேலும் தேர்வு குழுவுக்கு புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நவம்பர் 28 ஆம் தேதி மாலை 6 மணி வரை காலக்கெடு என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் மும்பையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தின்போதே புதிய தேர்வுக் குழு அமைக்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா குறிப்பிட்டிருந்தார். அதன்படி, இப்போது தேர்வுக்குழு கலைக்கப்பட்டுள்ளது.

எனினும் வரவிருக்கும் வங்கதேச சுற்றுப்பயணத்துக்கான அணியை கடைசியாக சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு தேர்வு செய்யும். அதன்பிறகே முழுமையாக தேர்வுக்குழு கலைக்கப்பட்டு புது குழு உருவாக்கப்படும். புதிய தேர்வுக் குழு டிசம்பரில் பொறுப்பேற்கும். புதிய தேர்வுக் குழுவில் இடம்பெற விரும்புவர்கள் குறைந்தபட்சம் ஏழு டெஸ்ட் போட்டிகள், 30 முதல் தர போட்டிகள் அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in