

தோஹா: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் கத்தார் நாட்டில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் 32 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாட உள்ளன. இந்த நிலையில் இந்த அணிகளின் கேப்டன்கள் யார், யார்? என்பது குறித்த முழு விவரம் இங்கே..
கால்பந்தாட்டத்தை கூர்ந்து கவனித்து வரும் ரசிகர்களுக்கு இந்த பெயர்கள் பரிச்சயமானதாக இருக்கலாம். தங்களுடன் தங்கள் நாட்டு வீரர்கள், மக்கள் என அனைவரது கனவையும் சுமந்து செல்லும் அணித் தலைவர்களின் நெஞ்சம் உறுதியானது. இந்த பணியை மெஸ்ஸி தொடங்கி லூகா மோட்ரிச் வரை பல அனுபவ வீரர்கள் கவனித்து வருகின்றனர்.