

ஐஎஸ்எல் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறும் போட்டியில் முன்னாள் சாம்பியன் அத்லெடிகோ டி கொல்கத்தா அணியும், நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி அணியும் பலப்பரீட்சை நட்த்துகின்றன.
கொல்கத்தா அணி 10 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் சென்னை அணி 13 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன. இதுவரை லீக் சுற்றில் கொல்கத்தா அணி சென்னையிடம் தோற்றதில்லை.
புனே அணியுடனான ஆட்டத் தில் வென்று வெற்றிப் பாதைக் குத் திரும்பியுள்ள சென்னை அணி அரை இறுதி வாய்ப்பை தக் கவைத்துக் கொண்டுள்ளது. சென்னை அணி உள்ளூரில் விளை யாடிய கடைசி 4 போட்டிகளில் ஒன்றில் கூடத் தோற்கவில்லை.
டெல்லி அணிக்கெதிராக உள்ளூரில் விளையாடிய முதல் போட்டியில் 3 கோல்கள் விட்டுக்கொடுத்த சென்னை அணி, அடுத்த 4 போட்டிகளில் 1 கோல் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது. அவர்கள் எடுத்துள்ள 13 புள்ளிகளில் 8 புள்ளிகள் உள்ளூரில் பெற்றதுதான்.
ஐஎஸ்எல் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்துள்ள கொல்கத்தாவின் இயான் ஹியூமி சென்னையின் தடுப்பாட்டத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என கருதப்படுகிறது. இந்த சீசனை மிகவும் மெதுவாகத் தொடங்கிய ஹியூமி முதல் சுற்றில் இரு கோல்கள் அடித்தார். இவற்றை பெனால்டியின் வாயிலாகவே அடித்தார். ஆனால் கடந்த சீசனைப் போலவே இரண்டாம் சுற்றில் சூடு பிடித்துள்ள ஹியூமி கடைசி 3 ஆட்டத்திலும் கோல் அடித்து அசத்தியுள்ளார்.