பாட்மிண்டன் தரவரிசை: சாய்னா முன்னேற்றம்

பாட்மிண்டன் தரவரிசை: சாய்னா முன்னேற்றம்
Updated on
1 min read

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் சாய்னா நெவால் 8-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் சாய்னா ஏற்றம் கண்டுள்ளார்.

அதேநேரத்தில் இந்தியாவின் மற்றொரு முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து 10-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் அவர் காலிறுதியோடு வெளியேறியதன் காரணமாக தரவரிசையிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

சீனாவின் லீ ஸியூரூய், ஷிக்ஸியான் வாங், இகன் வாங் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். தாய்லாந்தின் ரட்சனோக் இந்தனான் 4-வது இடத்திலும், தென் கொரியாவின் ஜி ஹன் சங் 5-வது இடத்திலும் உள்ளனர்.

ஆடவர் தரவரிசையைப் பொறுத்தவரையில் மலேசியாவின் லீ சாங் வெய் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் காஷ்யப் ஓர் இடத்தை இழந்து 21-வது இடத்தில் உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in