

ரஞ்சி கோப்பையில் பரோடா அணியை இன்னிங்ஸ் மற்றும் 44 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி வென்றது.
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் பரோடா 34.3 ஓவர்களில் 93 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 102.4 ஓவர்களில் 337 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கேப்டன் அபிநவ் முகுந்த் 100 ரன்கள் எடுத்தார்.
244 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய பரோடா அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 67.5 ஓவர்களில் 200 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஷோயிப் டாய் 69, தேவ்தார் 49 ரன்கள் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் அவுசிக் னிவாஸ் 4, விக்னேஷ் 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 7 புள்ளிகள் பெற்ற தமிழக அணி ஏ பிரிவில் 17 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.