ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்டு அறிவிப்பு

பொல்லார்டு | கோப்புப்படம்
பொல்லார்டு | கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை இந்தியன்ஸ் அணியின் அசத்தல் ஆல்ரவுண்டரான கெய்ரான் பொல்லார்டு, ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சமூக வலைதளத்தின் மூலம் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அது குறித்து அந்த அறிவிப்பில் தெளிவாக விளக்கியும் உள்ளார் அவர்.

ஐபிஎல் 2023 சீசனுக்காக 10 அணிகளும் எதிர்வரும் சீசனுக்கு தாங்கள் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்கள் குறித்த விவரத்தை வெளியிடுவதற்கான கெடு தேதி இன்றோடு நிறைவு பெறுகிறது. இந்தச் சூழலில் பொல்லார்ட் இதனை அறிவித்துள்ளார்.

“இன்னும் சில ஆண்டு காலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடலாம் என எண்ணி இருந்தேன். ஆனால் இந்த முடிவை அவ்வளவு எளிதாக எடுத்து விடவில்லை. இது தொடர்பாக அணி நிர்வாகத்துடன் நிறைய பேசி இருந்தேன். இப்போது எனது ஐபிஎல் கேரியருக்கு விடை கொடுத்துள்ளேன். இந்த அணி பல அசாத்தியங்களை நிகழ்த்தி காட்டி உள்ளது. நான் எப்போதும் மும்பை இந்தியன் தான்” என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010 முதல் சுமார் 13 ஆண்டு காலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் களத்தில் விளையாடி வந்துள்ளார் பொல்லார்டு. மொத்தம் 189 போட்டிகளில் விளையாடி 3412 ரன்கள் குவித்துள்ளார். 103 கேட்ச்களை பிடித்துள்ளார். 69 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஏப்ரல் வாக்கில் ஓய்வு பெற்றிருந்தார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in