Published : 14 Nov 2022 11:50 PM
Last Updated : 14 Nov 2022 11:50 PM

ஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உட்பட அணிகள் தக்க வைத்த, ரிலீஸ் செய்த வீரர்கள் குறித்த உத்தேச தகவல்

ஐபிஎல் கோப்பை | கோப்புப்படம்

மும்பை: எதிர்வரும் 2023 ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23-ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. பத்து அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் ரிலீஸ் செய்துள்ள வீரர்களின் விவரத்தை வெளியிடுவதற்கான கெடு தேதி நாளை (நவம்பர் 15) முடிவடைய உள்ளது. இந்த சூழலில் சிஎஸ்கே உட்பட அணிகள் தக்க வைத்த, ரிலீஸ் செய்த வீரர்கள் குறித்த உத்தேச தகவல் இதோ..

டி20 ஃபார்மெட்டில் நடத்தப்பட்டு வரும் பிரான்சைஸ் லீக் தொடராக ஐபிஎல் உள்ளது. இந்திய மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான ரசிகர்கள் ஏராளம். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் என அனைத்தும் பல் கோடி ரூபாய்க்கு ஏலம் போனது அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இந்நிலையில், பத்து அணிகளும் விடுவிக்க மற்றும் தக்க வைக்க உள்ள வீரர்களின் உத்தேச பட்டியல் இதுவாக இருக்கலாம் என கிரிக்கெட் வலுன்னர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அடுத்த சீசனில் விளையாடாத வீரர்களும் அடங்குவர்.

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டேவிட் வில்லியை விடுவிக்க உள்ளதாம்.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிறிஸ் ஜார்டனை ரிலீஸ் செய்ய உள்ளதாம். இவர்கள் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருபவர்கள்.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜடேஜா தக்கவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • லக்னோ அணி ஜேசன் ஹோல்டரை விடுவிக்கிறதாம்.
  • ஆஸ்திரேலிய வீரர்கள் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் எதிர்வரும் ஐபிஎல் சீசனில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது.
  • நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேடை தக்க வைக்கும் என தெரிகிறது.
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஷர்துல் தாக்கூர் விளையாடுவார் என தெரிகிறது.
  • பொல்லார்டை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவித்துள்ளது.
  • ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்பை ஆர்சிபி அணி மும்பை இந்தியன்ஸ் வசம் டிரேட் செய்துள்ளதாக தெரிகிறது.
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக சாம் பில்லிங்ஸ் ஐபிஎல் தொடரை தவிர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x