

மும்பை: எதிர்வரும் 2023 ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23-ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. பத்து அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் ரிலீஸ் செய்துள்ள வீரர்களின் விவரத்தை வெளியிடுவதற்கான கெடு தேதி நாளை (நவம்பர் 15) முடிவடைய உள்ளது. இந்த சூழலில் சிஎஸ்கே உட்பட அணிகள் தக்க வைத்த, ரிலீஸ் செய்த வீரர்கள் குறித்த உத்தேச தகவல் இதோ..
டி20 ஃபார்மெட்டில் நடத்தப்பட்டு வரும் பிரான்சைஸ் லீக் தொடராக ஐபிஎல் உள்ளது. இந்திய மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான ரசிகர்கள் ஏராளம். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் என அனைத்தும் பல் கோடி ரூபாய்க்கு ஏலம் போனது அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இந்நிலையில், பத்து அணிகளும் விடுவிக்க மற்றும் தக்க வைக்க உள்ள வீரர்களின் உத்தேச பட்டியல் இதுவாக இருக்கலாம் என கிரிக்கெட் வலுன்னர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அடுத்த சீசனில் விளையாடாத வீரர்களும் அடங்குவர்.