T20 WC | சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியை வாழ்த்திய ஹேரி கேன்

இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ஹேரி கேன்
இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ஹேரி கேன்
Updated on
1 min read

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. உலகக் கோப்பையை வென்ற தனது நாட்டு கிரிக்கெட் அணிக்கு அந்த நாட்டின் கால்பந்து அணி கேப்டன் ஹேரி கேன் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெகு விரைவில் கத்தார் நாட்டில் கால்பந்து உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில் இங்கிலாந்து அணி பங்குபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

“வாழ்த்துகள்!!! அபார செயல்திறனை வெளிப்படுத்தினீர்கள். நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்” என ஹேரி கேன் தெரிவித்துள்ளார். முன்னதாக, ‘நாங்கள் பட்டம் வென்றால் அது ஃபிஃபா உலகக் கோப்பையில் இங்கிலாந்து கால்பந்து அணிக்கு உத்வேகம் அளிக்கும்’ என்றார் ஜோஸ் பட்லர். அவர் சொன்னது போலவே இப்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணி கோப்பையை வென்றுள்ளது.

கடந்த 2018 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் ஹேரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேறி இருந்தது. குரோஷியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை இழந்திருந்தது. இருந்தும் அதில் கோல்களை பதிவு செய்த ஹேரி கேன் தங்கக் காலணியை வென்றிருந்தார்.

கத்தார் உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி ‘குரூப் பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் ஈரான், அமெரிக்கா மற்றும் வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. எப்படியும் அந்த அணி ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி கடந்த ஆண்டு நடைபெற்ற யூரோ கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேற இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in