

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா இல்லை, ஆனால், இந்தியக் குரல் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தை அதிர வைக்கும். ஆமாம், இது உண்மைதான்.
இங்கிலாந்து – பாகிஸ்தான் மோதும் இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஐஸ் ஹவுஸ் இசைக்குழு பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 13 வயதான ஜானகி ஈஸ்வர் இசை வெள்ளத்தால் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்.
ஜானகி ஈஸ்வரின் பெற்றோரான அனூப் திவாகரன், திவ்யா ரவீந்திரன் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள். மெல்பர்ன் மைதானத்தில் இறுதிப் போட்டியை காண 90,000 ரசிகர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தின் நடுவே ஜானகி ஈஸ்வர், ஜிம்பாப்வேயில் பிறந்த ஆஸ்திரேலியரான தாண்டோ சிக்விலா மற்றும் ஐஸ்ஹவுஸ் இசைக்குழுவின் முன்னணி பாடகி இவா டேவிஸ் ஆகியோருடன் இணைந்து ‘நாம் ஒன்று
படலாம்’ என்ற நிகழ்ச்சியில் பாட உள்ளார்.