Published : 13 Nov 2016 11:56 AM
Last Updated : 13 Nov 2016 11:56 AM

ஹிட்விக்கெட் ஆன 20-வது இந்திய வீரர் விராட் கோலி

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் நேற்று இந்திய கேப்டன் விராட் கோலி அடில் ரஷித் பந்தில் ஹிட்விக்கெட் ஆனார்.

ஹிட்விக்கெட் முறையில் லாலா அமர்நாத்திற்குப் பிறகு அவுட் ஆன 2-வது கேப்டன் ஆனார் விராட் கோலி. லாலா அமர்நாத் சென்னையில் 1949-ம் ஆண்டு மே.இ.தீவுகளுக்கு எதிராக ஹிட் விக்கெட் ஆனார்.

மொத்தமாக இதுவரை 20 இந்திய வீரர்கள் ஹிட்விக்கெட் முறையில் ஆட்டமிழந்துள்ளனர். இதில் லாலா அமர்நாத் மகன் மொஹீந்தர் அமர்நாத் தந்தையின் வழியைப் பின்பற்றி அதிகபட்சமாக 3 முறை ஹிட்விக்கெட் ஆகியுள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு மே.இ.தீவுகளுக்கு எதிராக வி.வி.எஸ்.லஷ்மண் ஹிட் விக்கெட் ஆனார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x