

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி 16 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தானைச் சந்திக்கிறது இங்கிலாந்து.
வெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறும்போது, அணியில் உள்ள 11 வீரர்களுமே சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் எப்போதுமே விரைவான தொடக்கத்தையும், ஆக்ரோஷத்தையும் விரும்புவோம். 11-வது இடத்தில் களமிறங்கும் ஆதில் ரஷித்தும் பேட்டிங் செய்வார். அந்த அளவுக்கு பேட்டிங்கில் ஆழம் இருக்கிறது.
ஹேல்ஸ், ஆடுகளத்தின் பரிமாணங்களை நன்றாக பயன்படுத்தினார். புத்திசாலித்தனமாக செயல்பட்டார். ஜோர்டானை சிறப்பாக பாராட்டியாக வேண்டும். நேரடியாக வந்து அரை இறுதியில் அதிலும் இறுதிப் பகுதியில் 3 ஓவர்களை வீசுவது என்பது கடினமான விஷயம். அவர் இறுதி வரை அழுத்தத்தை அருமையாக கையாண்டார். குறிப்பாக உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனான ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார்” என்றார்.
திரும்புகிறதா 1992…: 1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதி இருந்தன. இதில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி பட்டம் வென்றது. தற்போது 30 வருடங்களுக்குப் பிறகு அதே மண்ணில் டி 20 உலகக் கோப்பையில் இரு அணிகளும் சந்திக்க உள்ளன.