T20 WC அரையிறுதி | “பந்துவீச்சு, தொடக்கம்...” - தோல்விக்கு ரோகித் சர்மா அடுக்கிய காரணங்கள்

ரோகித் சர்மா | கோப்புப்படம்
ரோகித் சர்மா | கோப்புப்படம்
Updated on
1 min read

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவியுள்ளது. விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்தான். ஆனால், இந்தத் தோல்வி கிரிக்கெட் உலகில் மிகவும் மோசமான ஒன்றாகும். இந்தச் சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தோல்விக்கு பிறகு சொன்னது இதுதான்...

“இன்று இப்படி ஆனது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த ஸ்கோரை எட்ட பின்வரிசையில் சிறப்பாக விளையாடி இருந்தோம். இன்று ஏனோ பந்துவீச்சில் எங்களுக்கு எதிர்பார்த்தது கைகூடவில்லை. இதெல்லாம் நாக்-அவுட் போட்டிகளில் நிலவும் அழுத்தத்தை நாங்கள் எப்படி கையாள்கிறோம் என்பது குறித்தது. அணியில் ஒவ்வொருவரும் இதற்கு விளையாடி பழக்கப்பட்டவர்கள்தான். அந்த அனுபவத்தை ஐபிஎல் போட்டிகள் கொடுத்துள்ளன.

எங்கள் அணியின் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அவர்கள் அதை வெகு சிறப்பாக செய்திருந்தனர். இந்த ஆடுகளம் குறித்து நாங்கள் நன்றாக அறிவோம். வங்கதேச அணிக்கு எதிராக 9 ஓவர்களில் 85 ரன்களை கட்டுப்படுத்தி இருந்தோம். இன்று அதை செய்ய முடியவில்லை” என ரோகித் தெரிவித்திருந்தார்.

இரு நாட்டு அணிகளுக்கு இடையிலான தொடர்கள் மற்றும் லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் இந்திய அணியால் ஏன் நாக்-அவுட் சுற்றுகளில் வெல்ல முடியவில்லை என ஹர்ஷா போக்ளே கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு ரோகித் மேற்கண்ட பதிலை சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து நாட்டில் நடைபெறும் தொடரில் பங்கேற்க உள்ளது. அதன் பின்னர் வங்கதேசம் செல்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in