பந்தை பளபளப்பு செய்வதில் ஐசிசி-யின் தெளிவு தேவை: இங்கிலாந்து கேப்டன் குக் வலியுறுத்தல்

பந்தை பளபளப்பு செய்வதில் ஐசிசி-யின் தெளிவு தேவை: இங்கிலாந்து கேப்டன் குக் வலியுறுத்தல்
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹோபர்ட் டெஸ்ட்டில் பந்தை சேதப்படுத்தியதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸிஸ்-க்கு போட்டியின் ஊதியத்தில் 100 சதவீதத்தை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டது. இதை எதிர்த்து டு பிளெஸ்ஸிஸ் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதற்கிடையே இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சூயிங்கத்தை பயன்படுத்தி பந்தை பளபளப்பு செய்த காட்சிகளை இங்கிலாந்து ஊடகம் ஒன்று வெளியிட்டது. இது கடந்த சில நாட்களாக பலரது மத்தியில் விவாத பொருளாக மாறி உள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து அணியின் கேப்டன் அலாஸ்டர் குக் கூறும்போது, “ஐசிசி இந்த விவகாரத்தை தெளிவுப்படுத்த வேண்டுமென வீரர்கள் நினைப்பதாக நான் கருதுகிறேன். எது ஏற்புடையது, ஏற்புடையது அல்ல என்பதை ஐசிசி தெளிவுப்படுத்த வேண்டும். வீரர் ஒருவர் சூயிங்கத்தையோ அல்லது ஜெல்லி போன்ற திரவத்தையோ மென்றுவிட்டு அதன் பின்னர் உமிழ் நீரால் பந்தை பளபளப்பு செய்வார்.

இதன் காரணமாக பந்தின் தன்மை மாற்றம் அடையும். இனிப்பான திரவத்தில் கை வைத்து விட்டு அதனை பந்தின் மீது தேய்க்கக்கூடாது என்பதை ஐசிசி தான் கட்டாயப்படுத்த வேண்டும். இது நேர்மையாக நடந்து கொள்ள கை கொடுக்குமா, இல்லையா என்பது எனக்கு தெரியாது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in