T20 WC | இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்: ஷேன் வாட்சன் எதிர்பார்ப்பு

T20 WC | இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்: ஷேன் வாட்சன் எதிர்பார்ப்பு
Updated on
1 min read

சிட்னி: டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதையே எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “இறுதிப்போட்டியில் பாகிஸ்தானையும் இந்தியாவையும் பார்க்கவே அனைவரும் விரும்புவார்கள். 2007-ம் ஆண்டு டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. அதே போன்ற மோதலை மீண்டும் அனைவரும் பார்க்க விரும்புவார்கள்.

எல்லா தொடர்களிலும் சில நேரங்களில் ஓர் அணி கோட்டின் எல்லையில் விழுந்து, எப்படியாவது இறுதிப் போட்டிக்குள் நுழைந்து, அதை வெல்வதற்குச் செல்லும். குறிப்பாக இம்முறை பாகிஸ்தான் அணியினர் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள் என எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இந்தத் தொடரில் சில ஆட்டங்களில் அவர்கள், விளையாடிய விதம் அவ்வாறு இருந்தது. தொடரின் நடுப்பகுதியில் அவர்கள் மீது எதிர்பார்ப்பு இல்லை, இது அவர்களுக்கு சுதந்திரத்தை கொடுத்துள்ளது. இதுதான் நியூஸிலாந்து அணிக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும். இவ்வாறு ஷேன் வாட்சன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in