T20 WC | 2024 தொடருக்கு இதுவரை நேரடியாக தகுதி பெற்றுள்ள 12 அணிகள்

டி20 உலகக் கோப்பை | கோப்புப்படம்
டி20 உலகக் கோப்பை | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் நாக்-அவுட் சுற்று கடிதத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான ரசிகர்களின் ஃபேவரைட் அணிகளே அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதில் சில அணிகள் அப்செட் கொடுத்து சூப்பர் 12 சுற்றோடு வெளியேறி உள்ளன. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகள் அடங்கும்.

இந்த சூழலில் வரும் 2024 உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள 12 அணிகளின் விவரம் குறித்து அறிந்து கொள்வோம். இந்த தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. 55 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொடரை நடத்தும் அணிகளான மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா நேரடியாக தகுதி பெற்றுள்ளன. அதோடு நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் டாப் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. அதே போல ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் அடிப்படையில் இரண்டு அணிகளும் தகுதி பெற்றுள்ளன. இது தவிர ஆப்பிரிக்க தகுதி சுற்றில் 2 அணிகள், அமெரிக்க தகுதி சுற்றில் 1 அணி, ஆசிய தகுதி சுற்றில் 2 அணிகள், கிழக்கு ஆசிய-பசிபிக் தகுதி சுற்றில் 1 அணி, ஐரோப்பிய தகுதி சுற்றில் 2 அணிகள் என மொத்தம் 8 அணிகளும் இதில் பங்கேற்க உள்ளன.

இதுவரை தகுதி பெற்றுள்ள 12 அணிகள்..

  • மேற்கிந்திய தீவுகள்
  • அமெரிக்கா
  • இந்தியா
  • இங்கிலாந்து
  • நியூஸிலாந்து
  • பாகிஸ்தான்
  • ஆஸ்திரேலியா
  • தென்னாப்பிரிக்கா
  • இலங்கை
  • நெதர்லாந்து
  • வங்கதேசம்
  • ஆப்கானிஸ்தான்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in