Published : 04 Nov 2022 12:43 PM
Last Updated : 04 Nov 2022 12:43 PM

T20 WC | தனது சாதனையை முறியடித்த கோலியை மனதார பாராட்டிய ஜெயவர்தனே

ஜெயவர்தனே மற்றும் கோலி | கோப்புப்படம்

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் தனது அபார ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார் இந்திய வீரர் விராட் கோலி. இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 220 ரன்கள் குவித்துள்ளார். அதோடு டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். முன்னதாக இந்த சாதனை இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் தனது சாதனையை முறியடித்த விராட் கோலியை மனதார பாராட்டி உள்ளார் மஹிலா ஜெயவர்தனே. இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பகிர்ந்துள்ளது. தனது வாழ்த்து செய்தியில் அவர் சொல்லியுள்ளது என்ன?

“எந்தவொரு சாதனையையும் ஏதேனும் ஒருநாள் யாரேனும் ஒருவரால் தகர்க்கப்படும். எனது வசம் இருந்த சாதனையா முறியடித்தது நீங்கள்தான் விராட். நண்பா உங்களுக்கு எனது வாழ்த்துகள். களத்தில் எப்போதுமே ஒரு போர்வீரனை போல உங்கள் ஆட்டம் இருக்கும். ஃபார்ம் எனப்து தற்காலிகமானது. ஆனால் கிளாஸ் நிரந்தரமானது” என ஜெயவர்த்தனே சொல்லியுள்ளார். இதுவரையில் கோலி மொத்தம் 1065 ரன்களை டி20 உலகக் கோப்பையில் குவித்துள்ளார்.

முன்னதாக, கோலி மோசமான ஃபார்மில் இருந்த போது, “விராட் கோலி தற்போது எதிர்கொண்டு வரும் சூழல் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அவர் ஒரு தரமான ஆட்டக்காரர். ஃபார்ம் அவுட்டில் இருந்து மீண்டு வருவதற்கான டூல்களை அவர் கொண்டுள்ளார். கடந்த காலங்களில் இது மாதிரியான சூழலை அவர் கடந்து வந்துள்ளார். அதே வகையில் அவர் இந்த முறையும் மீண்டு வருவார். கிரிக்கெட் விளையாட்டில் கிளாஸ் என்பதுதான் நிரந்தரம். ஃபார்ம் வெறும் தற்காலிகமான ஒன்றுதான்” என ஜெயவர்த்தனே சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x