

மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டார்.
ரிக்கி பாண்டிங்கின் பயிற்சியாளர் பொறுப்பு காலம் முடிவுக்கு வருவதால், அடுத்த பயிற்சியாளராக மகேலா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டார்.
ஜெயவர்தனேயின் ஒப்பந்த காலம் ஓராண்டுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று தெரிகிறது, ஆனால் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விவரங்களை வெளியிடவில்லை.
2015-ல் ஓய்வு பெற்ற மகேலா ஜெயவர்தனேவுக்கு தலைமைப் பயிற்சியாளராக இது முதல் அனுபவமாகும். இதற்கு முன்னதாக டி20 லீகுகளில் வீரராகவும் நம்பிக்கை அறிவுரையாளராகவுமே அவர் செயல்பட்டு வந்தார்.
தனது நியமனம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மகேலா, “என்னுடைய வாழ்வின் புதிய அத்தியாயம். களத்தில் அதிக வெற்றிகளை குவிக்க வீர்ர்களுக்கு உறுதுணையாக இருப்பேன்” என்றார்.
2015-ல் தங்களது 2-வது ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 2016-ல் 5-ம் இடத்தில் முடிந்தது.