

இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 8 விக்கெட்கள் வீழ்த்தியதுடன் 65 ரன்களும் சேர்த்து வெற்றிக்கு உதவினார்.
போட்டி முடிவடைந்ததும் நேற்று முன்தினம் மாலை விசாகப் பட்டினம் கடற்படை தளத்துக்கு அஸ்வின் சென்றார். அங்கு ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பலில் கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுடன் காபி அருந்திய அஸ்வின், கிழக்கு கடற்படை அட்மிரல் தாஸ்குப்தாவிடம் தனது ஆட்டோகிராப்புடன் கூடிய பேட்டை பரிசாக அளித்தார்.
இந்த உரையாடலின் போது நாட்டை பாதுகாக்கும் வீரர் களுக்கு நன்றிகளையும், பாராட் டையும் அஸ்வின் தெரிவித்தார்.