T20 WC | கே.எல்.ராகுல் நிச்சயம் வலுவான கம்பேக் கொடுப்பார்: திராவிட் நம்பிக்கை

கே.எல்.ராகுல் மற்றும் ராகுல் திராவிட் | கோப்புப்படம்
கே.எல்.ராகுல் மற்றும் ராகுல் திராவிட் | கோப்புப்படம்
Updated on
1 min read

அடிலெய்ட்: கே.எல்.ராகுல் நிச்சயம் வலுவான கம்பேக் கொடுப்பார் என நம்புவதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார். நாளை இந்திய கிரிக்கெட் அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் வங்கதேச அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த நிலையில், திராவிட் இதனை பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல், ரன் சேர்க்க தடுமாறி வருகிறார். அவர் மட்டுமல்லாது இன்னும் சில அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரன் சேர்க்க தடுமாறி வருகின்றனர்.

இதுவரை இந்த தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள கே.எல்.ராகுல், 4 ரன்கள் (8 பந்துகள்), 9 ரன்கள் (12 பந்துகள்) மற்றும் 9 ரன்கள் (14 பந்துகள்) எடுத்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் கே.எல்.ராகுலை ட்ரோல் செய்ய தொடங்கினர். இவருக்கு மாற்றாக ஆடும் லெவனில் வேறு வீரருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என சொல்லி இருந்தனர். இந்த நிலையில்தான் ராகுல் திராவிட் இதனை சொல்லி உள்ளார்.

“கே.எல்.ராகுல் அற்புதமான வீரர். அவர் வலுவான கம்பேக் கொடுப்பார் என நாங்கள் நம்புகிறோம். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கு நிலவும் சூழல் பெரும்பாலான தொடக்க வீரர்களுக்கு சவாலானதாக உள்ளது” என ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in