Published : 01 Nov 2022 01:29 PM
Last Updated : 01 Nov 2022 01:29 PM

T20 WC | ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இலங்கை

இலங்கை - ஆப்கானிஸ்தான் போட்டி

பிரிஸ்பேன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இலங்கை கிரிக்கெட் அணி. இலங்கை அணி சார்பில் ஹசரங்கா அபாரமாக பந்து வீசி இருந்தார். அதேபோல தனஞ்ஜெய டி சில்வா அரை சதம் பதிவு செய்திருந்தார்.

இந்தப் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹசரங்கா, 4 ஓவர்கள் வீசி வெறும் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை விரட்டியது. நிசங்கா, 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருந்தும் அதன் பின்னர் வந்த தனஞ்ஜெய டி சில்வா, பொறுப்புடன் விளையாடினார். 42 பந்துகளில் 66 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் அவர். குசல் மெண்டிஸ் 25 ரன்கள், அசலங்கா 19 ரன்கள், ராஜபக்சே 18 ரன்கள் எடுத்தனர். 18.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து இலங்கை வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஹசரங்கா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x