Last Updated : 02 Nov, 2016 10:01 AM

 

Published : 02 Nov 2016 10:01 AM
Last Updated : 02 Nov 2016 10:01 AM

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று தேர்வு: இஷாந்த் சர்மா அணிக்கு திரும்ப வாய்ப்பு

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக் கான இந்திய அணி தேர்வு மும்பையில் இன்று நடைபெறு கிறது. வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்புகள் உள்ளன.

இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வரும் 9-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கு கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி மும்பையில் இன்று தேர்வு செய்யப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக 3-0 என வென்ற நிலையில் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியை எம்எஸ்கே பிரசாத் தலைமை யிலான தேர்வுக்குழு தேர்வு செய்ய உள்ளது.

நியூஸிலாந்து தொடரின்போது காயம் அடைந்த தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல், ஷிகர் தவண் ஆகியோர் இன்னும் முழு உடல் தகுதியை நிரூபிக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரும் இதே நிலையில்தான் உள்ளார்.

இதனால் இங்கிலாந்து தொடரிலும் கவுதம் காம்பீர் இடம் பெறக்கூடும். நியூஸிலாந்து தொடரில் 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெற்ற காம்பீர் 2-வது இன்னிங்ஸில் அரை சதம் அடித்தார். இதனால் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.

சிக்குன்குனியா காய்ச்சல் காரணமாக நியூஸிலாந்து தொடரில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தற்போது முழுவதுமாக குணமடைந்துள்ளார். ரஞ்சி கோப்பையில் இரு ஆட்டங்களில் விளையாடிய அவர் 40 ஓவர்கள் வீசி உடல் தகுதியை நிரூபித்துள்ளார்.

இதனால் இஷாந்த் சர்மா மீண்டும் அணிக்கு திரும்ப அழைக் கப்படக்கூடும். ஷிகர் தவணுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட கருண் நாயரும் அணியில் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன. ஒருநாள் போட்டி தொடரில் காயம் அடைந்த ரோஹித் சர்மாவுக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஓய்வளிக்கப்படக்கூடும். மற்றபடி நியூஸிலாந்து தொடரில் விளை யாடிய பெரும்பாலான வீரர்கள் அப்படியே இடம் பெறுவார்கள் என தெரிகிறது.

அலாஸ்டர் குக் தலைமை யிலான இங்கிலாந்து அணி வங்கதேசத்துக்கு எதிரான தொடரை 1-1 என சமன் செய்த நிலையில் இன்று இந்தியா வந்து சேருகிறது. 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள அந்த அணி ஒரு பயிற்சி ஆட்டத்தில் கூட விளை யாடவில்லை. இன்று மும்பை வரும் இங்கிலாந்து வீரர்கள் 5-ம் தேதி கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியாவில் வலைப் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

அன்றைய தினம் இரவு அல்லது 6-ம் தேதி காலை முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் ராஜ்கோட்டுக்கு இங்கிலாந்து வீரர்கள் புறப்பட்டு செல்வார்கள் என பிசிசிஐ தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. அதேவேளை யில் இந்திய அணி 5-ம் தேதி மாலை ராஜ்கோட்டை சென்ற டைகிறது.

தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் 17 முதல் 21-ம் தேதி வரையும், 3-வது டெஸ்ட் மொகாலியில் 26 முதல் 30-ம் தேதி வரையும், 4-வது டெஸ்ட் மும்பையில் டிசம்பர் 8 முதல் 12-ம் தேதி வரையும், 5-வது டெஸ்ட் சென்னையில் 16 முதல் 20-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x