

மெல்பேர்ன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சூப்பர் 12 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. அதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைத்துள்ளது. இந்த நிலையில் சூப்பர் 12 சுற்றின் புள்ளிப் பட்டியலை பார்ப்போம்.
ஆஸ்திரேலிய நாட்டி நடைபெற்று வரும் இந்தத் தொடரில் சூப்பர் 12 சுற்றில் மட்டும் நான்கு போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. அது புள்ளிப் பட்டியலில் பெரிய அளவில் எதிர்வினையை ஆற்றுகிறது. குறிப்பாக சூப்பர் 12 - குரூப் 1 பிரிவில் ஹெவி வெயிட் அணிகளான இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி வாஷ் அவுட் ஆகியுள்ளது ரசிகர்களை ‘ப்ச்’ கொட்ட வைத்துள்ளது.
இந்தப் போட்டி கிட்டத்தட்ட அரையிறுதிக்கு இணையாக பார்க்கப்பட்டது. ஏனெனில், இரு அணிகளும் இதற்கு முன்னர் விளையாடி இரண்டு போட்டிகள் தலா 1 வெற்றி மற்றும் 1 தோல்வியை பெற்றுள்ளன. அதனால் இதில் வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருந்தது. அதனால், இதற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. முன்னதாக, இதே மைதானத்தில் இன்று பகல் வேளையில் நடைபெற இருந்த ஆப்கனிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக ரத்தானது. சூப்பர் 12 புள்ளிப் பட்டியல்:
குரூப் 1
குரூப் 1 பிரிவில் முதல் நான்கு இடத்தில் உள்ள அணிகள் தலா 3 புள்ளிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையிலான வித்தியாசம் காரணமாக அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
குரூப் 2