T20 WC | “எங்களுக்கு எதிராக அந்த விசித்திர ஆட்டம் இருக்காது” - கோலி மீது நெதர்லாந்து கேப்டன் நம்பிக்கை

ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் விராட் கோலி
ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் விராட் கோலி
Updated on
1 min read

சிட்னி: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் நாளை களம் காண்கின்றன. இந்தப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக செய்ததை தங்கள் அணிக்கு எதிராக செய்ய மாட்டார் என நம்புவதாக நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்திருந்தார் கோலி. அவரது அபார ஆட்டம் இந்தியா அணியை வெற்றி பெற செய்தது. இந்தச் சூழலில் போட்டிக்கு முன்னதாக எட்வர்ட்ஸ் இதனைச் சொல்லி உள்ளார்.

“அன்றைய தினம் விராட் கோலியின் ஆட்டம் விசித்திரமான ஒன்று. எங்களுக்கு எதிராக அதை மீண்டும் செய்ய மாட்டார் என நம்புகிறேன். நாங்கள் வெல்வோம் என பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். அதனால் எங்களுக்கு ஆட்டத்தில் எந்தவித அழுத்தமும் இல்லை. எங்களது திறனை முறையாக வெளிப்படுத்துவதே எங்களது பிராண்ட் ஆப் கிரிக்கெட்.

எங்களது ஆட்டத்தை டாப் ஆன தரத்தில் வெளிக்கொண்டு வர விரும்புகிறோம். எங்களுக்கு அது போதுமா என்றால் போதும். அது இல்லையெனில் உலகக் கோப்பையில் விளையாடுவது வெறும் கனவாக மட்டுமே இருந்திருக்கும்” என எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி 12.30 மணி அளவில் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in