T20 WC | சிக்கந்தர் ரசா விளாசல்: சூப்பர் 12-ல் ஜிம்பாப்வே... கொண்டாட்டத்தில் நாட்டு மக்கள்!

சிக்கந்தர் ரசா.
சிக்கந்தர் ரசா.
Updated on
1 min read

ஹோபார்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது ஜிம்பாப்வே அணி. அந்த அணியின் வெற்றியில் சிக்கந்தர் ரசாவின் பங்கு மிகவும் முக்கியமானது. தங்கள் அணியின் சூப்பர் 12 என்ட்ரியை அந்த நாட்டு மக்கள் பாட்டு பாடியும், கரவொலி எழுப்பியும் கொண்டாடி மகிழ்ந்து உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணி முதல் சுற்றான குரூப் சுற்றில் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை வீழ்த்தி அடுத்த சுற்றான சூப்பர் 12-க்கு முன்னேறி உள்ளது. அந்த அணி இடம் பெற்றிருந்த பிரிவில் முதலிடம் பிடித்த காரணத்தால் சூப்பர் 12 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் விளையாட உள்ளது.

சில ஆண்டு கால நெருக்கடிக்கு பின்னர் மீண்டெழுந்துள்ளது ஜிம்பாப்வே. இதில் அந்த அணியின் ஆல்-ரவுண்டரான சிக்கந்தர் ரசாவின் ரோல் ரொம்பவே முக்கியமானது. அயர்லாந்து அணிக்கு எதிராக 82 ரன்களை விளாசி இருந்தார். அதே போட்டியில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார். இன்று ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 23 பந்துகளில் 40 ரன்கள் விளாசி இருந்தார். அதோடு 1 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார். நடப்பு ஆண்டில் 17 டி20 இன்னிங்ஸில் விளையாடி உள்ள அவர் 612 ரன்கள் எடுத்துள்ளார்.

ஜிம்பாப்வே அணியின் இந்த வெற்றியை அந்த நாட்டு மக்கள் பாட்டு பாடியும், கர ஒலி எழுப்பியும் கொண்டாடி மகிழ்ந்து உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in