

வல்சாத்தில் நடைபெறும் ரஞ்சி டிராபி பிரிவு சி போட்டியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது பேட்ஸ்மென் ஷாட்டினால் தலையில் அடிபட்ட ஹைதராபாத் வீரர் தன்மய் அகர்வால் மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்துச் செல்லப்பட்டார்.
இன்று (புதன்) சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தில் சட்டீஸ்கர் அணிக்கு எதிரான ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, உணவு இடைவேளக்கு சற்று முன்பாக, சட்டீஸ்கர் வீரர் மனோஜ் சிங், இடது கை ஸ்பின்னர் மெஹதி ஹசனை புல் ஷாட் ஆட அது பார்வர்ட் ஷார்ட் லெக்கில் நின்று கொண்டிருந்த அகர்வாலின் ஹெல்மெட்டை நேரடியாக வலுவாகத் தாக்கியது.
உடனடியாக அவர் தரையில் சாய்ந்தார். நினைவுடன் இருந்த அவர், தலைசுற்றுகிறது என்றார். மைதானத்திற்கு ஸ்ட்ரெச்சர் வரவழைக்கப்பட்டு முதல் கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பிறகு ஸ்ட்ரெச்சருடன் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் தன்மய் அகர்வால்.