T20 WC | இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் ரன் மழையா, வான் மழையா? - வானிலை நிலவரம்

மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானம்.
மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானம்.
Updated on
1 min read

மெல்பேர்ன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ள போட்டியில் வான் மழை ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என வானிலை சார்ந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் வரும் ஞாயிறு அன்று ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள சூப்பர் 12 சுற்றில் பலப்பரீட்சை செய்ய உள்ளன.

வானிலை மைய ஆய்வின்படி, போட்டி நடைபெற உள்ள நாளன்று மெல்பேர்ன் நகரில் 80 சதவீதம் மழை பொழிவு இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுமார் 1 முதல் 5 மில்லிமீட்டர் வரை மழைப்பொழிவு பதிவாகுமாம். இன்று (வியாழன்) அங்கு வெறும் 10 சதவீதம் மட்டுமே மழைப்பொழிவு இருக்க வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு போட்டியில் முடிவை எட்ட குறைந்தபட்சம் 5 ஓவர்களாவது ஆட்டம் நடைபெற வேண்டும். குரூப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாறாக அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளும் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்தபோது பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த முறை அந்த தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இயற்கை அதற்கு மழையின்றி உதவ வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in