T20 WC | 'இது அதுக்கும் மேல' IND vs PAK போட்டியை புரோமொட் செய்த 'தி ராக்' டுவைன் ஜான்சன்

ரோகித், டுவைன் ஜான்சன் மற்றும் பாபர் அசாம்.
ரோகித், டுவைன் ஜான்சன் மற்றும் பாபர் அசாம்.
Updated on
1 min read

எதிர்வரும் 23-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் மோதி விளையாட உள்ளன. இரு அணிகளுக்கும் இதுவே இந்த தொடரில் முதல் போட்டி. இந்நிலையில், இந்த போட்டியை புரோமொட் செய்துள்ளார் ஹாலிவுட் நடிகரும், தொழில்முறை மல்யுத்த (WWE) வீரருமான டுவைன் ஜான்சன். இவரை ரசிகர்கள் ‘தி ராக்’ என அன்போடு அழைப்பது வழக்கம்.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி உள்ளது. இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. முதல் சுற்று, சூப்பர் 12, அரையிறுதி மற்றும் இறுதி என மொத்தம் 45 போட்டிகள் இதில் அடங்கும். இதில் ஒன்று தான் வரும் ஞாயிறு அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ள போட்டி.

இந்தியாவும், பாகிஸ்தானும் பக்கத்து பக்கத்துக்கு நாடுகளாக இருந்தாலும் பல்வேறு கருத்துகளில் இரு நாடுகளுக்கும் முரண் உள்ளது. அதன் காரணமாக இந்த இரு அணிகளும் கிரிக்கெட் களத்தில் பலப்பரீட்சை செய்யும் போது, அதனை இந்த இருநாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேரடியாக இருநாடுகளுக்கும் இடையே நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பது இல்லை. ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் விளையாடுகின்றன. அதன் காரணமாக இந்த போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்த சூழலில் டுவைன் ஜான்சன், இந்த போட்டியைப் புரோமொட் செய்துள்ளார்.

சுமார் 20 நொடிகள் இந்த வீடியோ டைம் டியூரேஷன் கொண்டுள்ளது. “மிகப்பெரிய போட்டியாளர்கள் மோதும் போது உலகம் அப்படியே அசையாமல் நிற்கும். இது வழக்கமான கிரிக்கெட் போட்டி அல்ல. அதுக்கும் மேல்.. இது இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான நேரம்” என அதில் அவர் தெரிவித்துள்ளார். அவர் நடித்துள்ள பிளாக் ஆடம் திரைப்படம் இந்தியாவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in