

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தன் 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 49 ஓவர்களில் 310 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கேப்டன் அலஸ்டைர் குக் தனது 30-வது டெஸ்ட் சதத்தை எடுத்தார்.
114/0 என்று இங்கிலாந்து இன்று தொடங்கியது. 38. 3 ஓவர்களில் இன்று 146 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.
தொடக்க அறிமுக வீரர் ஹமீத் 177 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 82 ரன்கள் எடுத்து அமித் மிஸ்ரா பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அருமையான இன்னிங்ஸ், சதம் எடுக்காதது துரதிர்ஷ்டமே. குக்கும் இவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 180 ரன்களைச் சேர்த்தனர்.
அலஸ்டைர் குக் 243 பந்துகளைச் சந்தித்து 13 பவுண்டரிகளுடன் 130 ரன்களை எடுத்து அஸ்வின் பந்தைல் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தவுடன் டிக்ளேர் அறிவிப்பு செய்தார், இவருடன் பென் ஸ்டோக்ஸ் 29 ரன்களில் நாட் அவுட்டாக இருந்தார். ஜோ ரூட் விரைவு ரன் குவிப்பு கவனத்தில் மிஸ்ராவிடம் 4 ரன்களில் ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டில் அவுட் ஆனார்.
75.3 ஓவர்களில் 260/3 என்று டிக்ளேர் செய்தது இங்கிலாந்து, இந்தியா டிராவுக்குச் செல்லுமா, வெற்றிக்குச் செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.