T20 WC | சூப்பர் 12 சுற்றில் நுழைவது யார்?

T20 WC | சூப்பர் 12 சுற்றில் நுழைவது யார்?
Updated on
1 min read

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக இலங்கை அணி பெற்ற வெற்றியால் ‘ஏ’ பிரிவில் இருந்து சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற கடும் போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த பிரிவில் நெதர்லாந்து மோதிய இரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இலங்கை, நமீபியா அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன.

இந்த இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளன. இலங்கை தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை சந்திக்கிறது. அதேவேளையில் நமீபியா, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. இலங்கை அணி நெதர்லாந்தை வீழ்த்தும் பட்சத்திலும், நமீபியா அணி ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தும் பட்சத்திலும் நெட் ரன் ரேட்டே சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் இரு அணிகளை தீர்மானிக்கும். ஏனெனில் மேற்கூறியபடி முடிவுகள் கிடைக்கப்பெற்றால் இலங்கை, நெதர்லாந்து, நமீபியா ஆகிய 3 அணிகளுமே தலா 4 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்யும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in