36-வது பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி நியமனம்; விடைபெற்றார் கங்குலி

பிசிசிஐ 36-வது தலைவர் ரோஜர் பின்னி.
பிசிசிஐ 36-வது தலைவர் ரோஜர் பின்னி.
Updated on
1 min read

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 36-வது தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் தலைவர் பதவி வகித்து வந்த முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் பதவிக் காலம் முடிந்துள்ளது. ஆண்டு பொதுக் கூட்டத்தில் பிசிசிஐ-யின் புதிய தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரத்தில் வாரியத்தின் செயலாளர் பொறுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா தொடர்கிறார். கடந்த 2019 வாக்கில் கங்குலி உடன் ஜெய்ஷா இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

67 வயதான ரோஜர் பின்னி, கடந்த 1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடியவர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது அந்த மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இந்திய அணிக்காக 27 டெஸ்ட் மற்றும் 72 ஒருநாள் போட்டிகளில் பின்னி விளையாடி உள்ளார். அவர் போட்டியின்றி பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல பொருளாளராக பாஜக எம்.எல்.ஏ ஆஷிஷ் ஷெலர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in