சென்னை ஓபனில் அகுட் பங்கேற்பு

சென்னை ஓபனில் அகுட் பங்கேற்பு
Updated on
1 min read

அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் 14-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்ட்டோ அகுட், 48-ம் நிலை வீரரான குரோஷியாவின் போர்னா கோரிச் ஆகியோர் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.

உலகின் 6-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னை ஓபனில் களமிறங்குவதாக அறிவித்துள்ள நிலையில் அகுட்டும், கோரிச்சும் சென்னை ஓபனில் பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளது டென்னிஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெற்காசியாவின் ஒரே ஏடிபி போட்டியான சென்னை ஓபன் வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நுங்கம்பாக்கத் தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in