Published : 18 Oct 2022 07:26 AM
Last Updated : 18 Oct 2022 07:26 AM

T20 WC | அயர்லாந்து அணியை வென்றது ஜிம்பாப்வே

அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் விளாசிய ஜிம்பாப்வே அணியின் ஷிகந்தர் ராஸா. படம்: ஏஎப்பி

ஹோபர்ட்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அயர்லாந்தை 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஜிம்பாப்வே அணி.

ஹோபார்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷிகந்தர் ராஸா 48 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசினார். அயர்லாந்து அணி சார்பில் ஜோஸ் லிட்டில் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

175 ரன்கள் இலக்குடன் பேட் செய்த அயர்லாந்து அணி 22 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து சரிவை சந்தித்தது. பால் ஸ்டிர்லிங் 0, ஆன்டி பால்பிர்னி 3, லார்கன் டக்கர் 11, ஹாரி டெக்டர் 1 ரன்னில் நடையை கட்டினர். சிறிது தாக்குப்பிடித்து விளையாடிய கர்டிஸ் கேம்பர் 27, ஜார்ஜ் டாக்ரெல் 24, கரேத் டெலானி 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து மார்க் அடேர் 9, சிமி சிங் 0 ரன்களில் நடையை கட்டினர். இறுதிக்கட்டத்தில் பாரி மெக்கார்த்தி 22, ஜோஸ் லிட்டில் 7 ரன்கள் சேர்த்தனர். முடிவில் 20 ஓவர்களில் அயர்லாந்து அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

ஜிம்பாப்வே அணி சார்பில் பிளெஸ்ஸிங் முசரபானி 3 விக்கெட்களையும் ரிச்சர்ட் நகரவா, தென்டை சத்தரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி 2 புள்ளிகளை பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x