

ஆடவர் 57 கிலோ மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமீத் குமார் பாகிஸ்தானின் அசார் ஹுசைனை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
பாகிஸ்தான் வீரரை அமீத் குமார் எதிர்கொண்டதால் இந்த போட்டியின் முடிவு ரசிகர்களால் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. இதில் அபாரமாக செயல்பட்டு அசாரை நிலைகுலையச் செய்த அமீத் குமார் 10-0 என்ற கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ஹாக்கியில் இந்தியா தோல்வி
காமன்வெல்த் ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 2-4 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.