சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு வழங்கப்படும் Ballon d'Or விருது | வெல்லப்போவது யார்?

Ballon d'Or விருது.
Ballon d'Or விருது.
Updated on
1 min read

பாரிஸ்: சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் Ballon d'Or விருதை நடப்பு ஆண்டில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் எகிறி உள்ளது. இதில் ஆடவர் பிரிவில் மொத்தம் 30 கால்பந்தாட்ட வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். வழக்கம் போலவே விருதை வெல்லும் பேவரைட் வீரர்கள் குறித்த பட்டியலும் தயாராக உள்ளது. அது குறித்து பார்ப்போம்.

கடந்த 1956 முதல் பிரெஞ்சு செய்தி இதழான ‘பிரான்ஸ் ஃபுட்பால்’ இந்த விருதை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு வழங்கி வருகிறது. வாக்கெடுப்பு மூலம் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வீரர்களில் சிறந்த வீரர் தேர்வு செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக மெஸ்ஸி இந்த விருதை 7 முறை வென்றுள்ளார். ரொனால்டோ, 20 முறை இந்த விருதை வெல்வதற்கான பரிந்துரையில் இடம் பெற்றுள்ளார். அவர் 5 முறை இந்த விருதை வென்றுள்ளார்.

வழக்கமாக ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஆண்டு செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் ஆகஸ்ட் முதல் ஜூலை வரையிலான காலத்தில் இந்த செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2021-22 சீசனுக்கான விருதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 வீரர்களில் ரியல் மாட்ரிட் அணியின் கரீம் பென்சிமா, லெவோண்டஸ்கி, கெவின் டி ப்ரூய்ன், முகமது சாலா ஆகிய வீரர்கள் விருதை வெல்லும் பேவரைட் வரிசையில் உள்ளனர். மெஸ்ஸி இந்த முறை பரிந்துரைக்கப்படவில்லை. இந்த விருதை தவிர வேறு சில விருதுகளும் இந்த விழாவில் வழங்கப்படுகிறது.

அக்டோபர் 18 (செவ்வாய்) இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணியளவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in