

கொல்கத்தா: மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவர் (சிஏபி) பதவிக்கு போட்டியிட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி முடிவு செய்துள்ளார்.
தற்போது பிசிசிஐ தலைவராக உள்ள சவுரவ் கங்குலி, அந்தப் பதவியில் தொடரப் போவதில்லை என அறிவித்துள்ளார். இந்நிலையில் சிஏபி தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதை நேற்று அவர் உறுதி செய்தார். வரும் 22-ம் தேதி தலைவர் பதவிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்யப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.