

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர், ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரில் யாருக்கு வாய்ப்பளிப் பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராஜ்கோட்டில் நேற்று அனில் கும்ப்ளே நிருபர்களிடம் கூறியதாவது:
இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த 3 டெஸ்ட் தொடரிலும் நாம் தோல்வியை சந்தித்துள்ளோம். இருப்பினும் இப்போது 2 அணி களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் சிறப்பான ஆட் டத்தை வெளிப்படுத்தி வருகிறார் கள். நியூஸிலாந்து அணிக்கு எதி ரான தொடரில் ஆடியதைப் போன்ற சிறப்பான ஆட்டத்தை இந் திய வீரர்கள் வெளிப்படுத்தினால் இந்த தொடரில் நம்மால் வெல்ல முடியும்.
முதல் டெஸ்ட் போட்டி நடக்கும் ராஜ்கோட் மைதானம் நல்ல ஆடுகளத்தைக் கொண்டுள்ளது. புதிய மைதானமான இங்கு இதுவரை டெஸ்ட் போட்டிகள் நடந்ததில்லை. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. அதனால் டெஸ்ட் போட்டியில் இங்குள்ள ஆடுகளம் எப்படி செயல்படும் என்பதை கணிக்க முடியவில்லை.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ள அணியில் 6-வது பேட்ஸ்மேனாக கருண் நாயரை சேர்ப்பதா அல்லது 5-வது பந்து வீச்சாளராக ஹர்திக் பாண்டி யாவை சேர்ப்பதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இருவ ரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தி வருகின்றனர். மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசுவதுடன் பேட்டிங்கிலும் ரன்களைக் குவிக்கும் பாண்டியா, இந்திய அணிக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார் என்று நம்புகிறோம். அதே நேரத்தில் கருண் நாயரும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு தேர்வு பெற்றுள் ளார். தற்போது ரோஹித் சர்மா காயமடைந்துள்ளது கருண் நாயருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.