ஆஸ்திரேலியாவை மீண்டும் வீழ்த்தியது இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவை மீண்டும் வீழ்த்தியது இங்கிலாந்து
Updated on
1 min read

கான்பெரா: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-0 என கைப்பற்றியது.

கான்பெராவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேவிட் மலான் 49 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 82 ரன்களும் மொயின் அலி 27 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் விளாசினர்.

179 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 19ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 4, ஆரோன் பின்ச்13, மிட்செல் மார்ஷ் 45, கிளென்மேக்ஸ்வெல் 8, மார்கஸ் ஸ்டாயினிஸ் 22, டிம் டேவிட்40 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

மேத்யூவேட், பாட் கம்மின்ஸ் களத்தில் இருந்த நிலையில் சேம்கரண் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் 3 பந்துகளில் பாட் கம்மின்ஸ் ஒரு சிக்ஸர்உட்பட 9 ரன்கள் சேர்த்தார். ஆனால் அடுத்த 3 பந்துகளிலும் 4 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ஓவர்கள் முடிவில்ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. மேத்யூ வேட் 10, பாட் கம்மின்ஸ் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது. இரு அணிகள் மோதும் கடைசி போட்டி இதே மைதானத்தில் நாளை (14-ம் தேதி) நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in