தேசிய விளையாட்டில் 74 பதக்கங்களுடன் தமிழகத்துக்கு 5-வது இடம்

தேசிய விளையாட்டில் 74 பதக்கங்களுடன் தமிழகத்துக்கு 5-வது இடம்
Updated on
1 min read

36-வது தேசிய விளையாட்டு போட்டியில் பதக்க பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தை பிடித்தது.

36-வது தேசிய விளையாட்டு போட்டிகுஜராத்தில் உள்ள 6 நகரங்களில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது.

இதில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

மொத்தம் 36 விளையாட்டு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. 14 நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டு திருவிழா நேற்றுடன் முடிவடைந்தது.

இதில் பதக்கப் பட்டியலில் சர்வீசஸ்அணி 61 தங்கம், 35 வெள்ளி, 32 வெண்கலம் என 128 பதக்கங்கள் குவித்து முதலிடம் பிடித்தது. மகாராஷ்டிரா 39 தங்கம், 38 வெள்ளி, 63 வெண்கலம் என 140 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், ஹரியாணா 38 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலத்துடன் 116 பதக்கங்களை பெற்று 3-வது இடமும் பிடித்தன.

கர்நாடகா 27 தங்கம், 23 வெள்ளி, 38 வெண்கலப் பதக்கம் என 88 பதக்கங்களுடன் 4-வது இடம் பெற்றது. தமிழகம் 25 தங்கம், 22 வெள்ளி, 27 வெண்கலத்துடன் 74 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் 5-வது இடம் பிடித்தது. கேரளா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முறையே 6 முதல் 10 இடங்களை பிடித்தன. 37-வதுதேசிய விளையாட்டு போட்டி கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in