“ஆருயிர் மகனை கொஞ்சம் மிஸ் செய்கிறேன்” - ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சிப் பதிவு

ஹர்திக் பாண்டியா | கோப்புப்படம்
ஹர்திக் பாண்டியா | கோப்புப்படம்
Updated on
1 min read

பெர்த்: “எனது ஆருயிர் மகனை கொஞ்சம் மிஸ் செய்கிறேன். வாழ்நாளில் எனக்கு கிடைத்த சிறந்தப் பரிசு அவன்” என ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதுவும் தனது பிறந்த நாளன்று இந்தப் பதிவை அவர் பதிவு செய்துள்ளார். தற்போது இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவில் உள்ளார் அவர்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இதுவரை 11 டெஸ்ட், 66 ஒருநாள் மற்றும் 73 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 2907 ரன்கள் மற்றும் 134 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இந்திய அணியின் துருப்புச் சீட்டு அவர் என சொல்லப்படுகிறார். அணிக்கு தேவைப்படும் நேரத்தில் வேகப்பந்து வீச்சாளராகவும், பேட்ஸ்மேனாகவும் கைகொடுத்து உதவுவார். ஆட்டத்தை வென்று கொடுக்கும் மேட்ச் வின்னர்.

இன்று தனது 29-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அவர். ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். அவரது குடும்பம் தற்போது இந்தியாவில் உள்ளது. இந்நிலையில், பாண்டியா தனது மகன் அகஸ்தியாவை கொஞ்சம் மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார்.

அவர் இப்போது தன் வாழ்நாளின் சிறந்த ஃபார்மில் உள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி கடந்த ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வெல்ல செய்தார். அது தவிர சர்வதேச கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி உள்ளார். இந்த நிலையில்தான் மகன் அகஸ்தியாவுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் இருவரும் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடி அசத்துகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in