Published : 10 Oct 2022 04:10 PM
Last Updated : 10 Oct 2022 04:10 PM
பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு ஆஸ்திரேலிய லெவன் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது. எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி அங்கு சென்றுள்ளது. இந்நிலையில், பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் மேற்கு ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிராக முதல் வார்ம்-அப் போட்டியில் இந்திய அணி விளையாடியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. கே.எல்.ராகுல் மற்றும் கோலிக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். பாண்டியா 27 ரன்களும், ஹூடா 22 ரன்களும் எடுத்தனர்.
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மேற்கு ஆஸ்திரேலிய அணி விரட்டியது. சாம், 59 ரன்களை குவித்தார். 20 ஓவர்களில் வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தது அந்த அணி. அர்ஷ்தீப் 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருந்தனர்.
Innings Break!#TeamIndia post a total of 158/6
— BCCI (@BCCI) October 10, 2022
Suryakumar Yadav 52 off 35 (3x4, 3x6)
Hardik Pandya 29 off 20 pic.twitter.com/ghN3R0coqr
Sign up to receive our newsletter in your inbox every day!