Published : 10 Oct 2022 06:24 AM
Last Updated : 10 Oct 2022 06:24 AM

டேவன்கான்வே விளாசலில் நியூஸிலாந்து வெற்றி

கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடர் நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூஸிலாந்து – வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் பேட்செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நஜ்முல்ஹொசைன் ஷான்டோ 33, நூருல்ஹசன் 25, அஃபிப் ஹொசைன் 24 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி தரப்பில் டிரெண்ட் போல்ட்,டிம் சவுதி, மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

138 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின் ஆலன் 16, கேன் வில்லியம்சன் 30 ரன்களில் ஆட்டமிழந்தனர். டேவன் கான்வே 51 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 70 ரன்களும் கிளென் பிலிப்ஸ் 9 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து அணிக்கு இந்தத் தொடரில் இது முதல் வெற்றியாக அமைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x