

ராஞ்சி: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியை இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இந்த போட்டியில் அசத்தலாக விளையாடி இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்த ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணி விளையாடிக் கொண்டிருக்கிறது. முதல் போட்டியை தென்னாப்பிரிக்கா வென்றிருந்தது.
இந்நிலையில், இந்த தொடரின் இரண்டாவது போட்டி ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது. 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.
இந்திய அணி 48 ரன்கள் எடுத்து போது 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இணைந்த இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இணைந்து 161 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் ஆட்டத்தை நேர்த்தியுடன் அணுகி இருந்தனர். இஷான் கிஷன், 84 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து அவுட்டானார். வெறும் ரன்களில் அவர் சதத்தை மிஸ் செய்தார். 4 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும்.
பின்னர் வந்த சஞ்சு சாம்சனுடன் இணைந்து 73 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஷ்ரேயஸ். அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை பதிவ செய்தார். அவர் 111 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார். சஞ்சு சாம்சன், 30 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி 45.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் 11-ம் தேதி டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியாக அது அமைந்துள்ளது.