அழுத்தமாக உணர்ந்தால் ஐபிஎல் விளையாட வேண்டாம்: கபில் தேவ்

கபில் தேவ் (கோப்புப்படம்).
கபில் தேவ் (கோப்புப்படம்).
Updated on
1 min read

ஆட்டத்தில் அதிக அளவு அழுத்தம் இருப்பதாக உணரும் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட வேண்டாம் என வீரர்களிடம் தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ். மாடர்ன் டே கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடும் வீரர்களுக்கு நிறைய அழுத்தம் இருக்கிறதா என அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்த பதிலை சொல்லியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவதால் அழுத்தம் இருப்பதாக ஒரு சில புகார் உள்ளது. அதனை சிலர் வெளிப்படையாக தொலைக்காட்சியில் சொல்லி நான் பார்த்துள்ளேன். அதனால் அவர்களுக்கு இதனை சொல்லிக் கொள்கிறேன் என தனியார் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் சொல்லியுள்ளார்.

“டிவியில் நிறைய முறை இதனை சொல்லி நான் கேட்டுள்ளேன். ஐபிஎல் விளையாடுவதால் வீரர்கள் மீது அதிக அளவு அழுத்தம் இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி என்றால் நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். அழுத்தத்தை உணரும் வீரர்கள் வீரர்கள் ஐபிஎல் விளையாட வேண்டாம்.

வீரர்கள் கிரிக்கெட் விளையாட்டை ரசித்து விளையாடினால் அங்கு அழுத்தம் இருக்காது. மன அளவிலான சோர்வு குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஒரு விவசாயி. ஆனால் விளையாட்டை ரசித்து, ரொம்ப அனுபவித்து விளையாடுவேன். அங்கு அழுத்தம் இருப்பதாக நான் உணர்ந்தது இல்லை. அதே தான் வீரர்களுக்கும். விளையாட்டை ரசித்து விளையாடினால் அழுத்தம் ஏதும் இருக்காது” என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in